தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 குறைந்து ஒரு சவரன் ரூ.37,864-க்கு விற்பனை
Jun 29 2022 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, 38 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சென்றது.
ஆபரணத்தங்கம் விலை, இன்று கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 256 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 4 ஆயிரத்து 733 ரூபாய்க்கும், ஒரு சவரன் 37 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 41 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 65 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ 65 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.