முதலமைச்சர் ஜெயலலிதாவை கோயம்புத்தூர், தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர், உள்ளாட்சி அமைப்புகளின் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Sep 24 2014 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர், தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரு. கணபதி ப. ராஜ்குமார் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி A.P.R. அந்தோணி கிரேஸி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அரக்கோணம் நகர மன்றத் தலைவராக வெற்றி பெற்ற திரு. எஸ். கண்ணதாசன், கடலூர் நகர மன்றத்தலைவராக வெற்றி பெற்ற திரு. ஆர். குமரன், விருத்தாச்சலம் நகர மன்றத் தலைவராக வெற்றி பெற்ற திரு. பி. அருளழகன், ராமநாதபுரம் நகர மன்றத் தலைவராக வெற்றி பெற்ற திருமதி எஸ். சந்தான லெட்சுமி ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில்சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற திரு எம். சிவக்குமார், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற திரு. A. பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தலைவராக வெற்றி பெற்ற திரு. எஸ். பழனிச்சாமி, கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பேரூராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற திரு. எஸ். தங்கராஜ், கோயம்புத்தூர் மாவட்டம், இருகூர் பேரூராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற திருமதி D. பத்மாசுந்தரி, திருநெல்வேலி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்றத்தலைவராக வெற்றி பெற்ற திரு. வி. பண்டாரம் ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00