நாளை ஒரே நாளில் 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது : அசோக் செல்வன், சித்தார்த், சமுத்திரகனியின் நடிப்பில் 4 படங்கள் ரிலீஸ்
Jun 8 2023 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நாளை ஒரே நாளில் 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அசோக் செல்வன் - சரத்குமார் கூட்டணியில் உருவான போர்த்தொழில், சித்தார்த்தின் டக்கர், சமுத்திர கனியின் விமானம் மற்றும் குருசோமசுந்தரத்தின் பெல் ஆகிய திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளன. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் கூட்டணியில் போர்த்தொழில் திரைப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி உள்ளது. நடிகர் சித்தார்த் நடிப்பில் டக்கர் திரைப்படம் ஆக்ஷனை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதேபோன்று மாற்றுத் திறனாளியான மகன் விமானத்தில் பயணிக்க ஆசைப்படுவது குறித்து விவரிக்கிறது விமானம் திரைப்படம். இந்த 3 திரைப்படங்களுடன் குருசோமசுந்தரம் நடிப்பில், வெங்கட் புவன் இயக்கியுள்ள பெல் திரைப்படமும் நாளை வெளியாகிறது.