கவிஞர் வைரமுத்து மீது பாடகி புவனா சேஷன் பாலியல் புகார் : தனது இச்சைக்காக இளம்பெண் பாடகர்களின் கனவை கலைத்தவர் வைரமுத்து என காட்டம்
Jun 10 2023 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கவிஞர் வைரமுத்து மீது பாடகி புவனா சேஷன் என்பவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பாடகி சின்மயி உட்பட 15க்கும் மேற்பட்ட பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அந்த வகையில், வைரமுத்து மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட 17 பேர்களில் தானும் ஒருவர் என்றும் பாலியல் துன்புறுத்தல் சூழ்நிலையில் இருந்து வெளிவருவது மிகவும் கடினமானது என்றும் பாடகி புவனா சேஷன் தெரிவித்துள்ளார். மேலும், இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை தான் விரும்பவில்லை என தெரிவி்துள்ள அவர், பாடகி சின்மயியின் தைரியம் வியக்க வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.