நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகியோரின் சீராய்வு மனுக்‍கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு

Jan 14 2020 7:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிர்பயா வழக்‍கில், தங்களுக்‍கு விதிக்‍கப்பட்டுள்ள தூக்‍கு தண்டனையை நிறுத்திவைக்கக்‍கோரி, இரு குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த சீராய்வு மனுக்‍கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

டெல்லியில், மருத்துவ மாணவி நிர்பயா, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரில், ஒருவன், சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 18 வயது நிரம்பாத ஒருவனுக்கு, சிறை தண்டனை விதிக்‍கப்பட்டு பின்னர் விடுவிக்‍கப்பட்டான். டெல்லி திஹார் சிறையில் உள்ள மற்ற 4 பேருக்‍கும், வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்‍கு தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தங்களுக்‍கு விதிக்‍கப்பட்டுள்ள தூக்‍கு தண்டனையை நிறுத்திவைக்கக்‍கோரி குற்றவாளிகள் வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கடந்தவாரம் சீராய்வு மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, இருவரின் சீராய்வு மனுக்‍களையும் இன்று நிராகரித்தது. இதையடுத்து, குற்றவாளிகள் தூக்‍கிலிடப்படுவது உறுதியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00