நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Jan 14 2020 9:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் பணவீக்கம் , விலைவாசி உயர்வுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத, பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் என திருமதி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம், 7.35 சதவிகிதமாக உயர்ந்தது. இது, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். கடந்த நவம்பர் மாதத்தில் 5.54 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் தற்போது மேலும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி, ஏழை-எளிய மற்றும் சாதாரண மக்களை மிக அதிகமாக பாதிக்கும் வகையில், காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதற்கு, மத்திய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத, பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். காய்கறிகள், எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஏழை-எளிய மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாரதிய ஜனதா அரசு, ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, அவர்களின் வயிற்றில் அடித்து வருவதாக திருமதி. பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3821.00 RS. 4206.00
மும்பை Rs. 3901.00 Rs. 4001.00
டெல்லி Rs. 3901.00 Rs. 4021.00
கொல்கத்தா Rs. 3940.00 Rs. 4080.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00