தண்ணீரை R.O. முறையில் சுத்திகரிக்‍க தடை - 2 மாதங்களில் நடவடிக்‍கை எடுக்‍க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Jan 18 2020 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
R.O தண்ணீர் சுத்திகரிப்பான்களை தடை செய்ய, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தடி நீரை சுத்திகரிக்க ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் R.O முறை நாடெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், R.O தண்ணீர் சுத்திகரிப்பான் தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட குழு, அதன் அறிக்‍கையை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து R.O தண்ணீர் சுத்திகரிப்பான்களை தடை செய்ய, மத்திய அரசுக்‍கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

R.O முறையால் பெறப்படும் குடிநீரால், மக்களின் சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே இதை தடைசெய்ய வேண்டும் என்றும், தடை செய்வது தொடர்பான அறிவிப்பாணையை 2 மாதங்களுக்குள் மத்திய அரசு வெளியிடவேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை செயல்படுத்த 4 மாதம் அவகாசம் தேவைப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வழக்‍கு, வரும் மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00