நாட்டை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

Jan 19 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான் என்றும், எனினும், அது நடக்காத காரியம் அல்ல என்றும், மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், இந்தூர் மேலாண்மைச் சங்கத்தின், 29-வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய, பா.ஜ.க., மூத்தத் தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான, திரு. நிதின் கட்கரி, வரும் 2024ம் ஆண்டுக்குள், இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது, கடினமான இலக்கு தான் என்றும், எனினும், அது நடக்காத காரியம் அல்ல என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியை குறைத்து விட்டால், அந்த இலக்கை எளிதில் எட்டிவிடலாம் என்று குறிப்பிட்ட அவர், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், நிலக்கரி, செம்பு, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய, கோடிக்கணக்கில் நாம் செலவு செய்து வருவதாகவும், பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால், இறக்குமதிக்கு அதிகளவில் செலவு செய்வதை முதலில் நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00