பட்டம் பெறுவதுடன் கல்வி நிறைவடையவில்லை - குடியுரிமை என்பது உரிமை மட்டுமல்ல; கடமையும் கூட : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே பேச்சு

Jan 19 2020 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை என்பது, மக்களின் குடியுரிமை சார்ந்த விஷயம் மட்டுமல்ல என்றும், அவர்கள் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் கொண்டது என்றும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ராஷ்டிரசந்த் துகடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் 107-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே, நாட்டில் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்டதாகவும், துரதிருஷ்டவசமாக, சில கல்வி நிறுவனங்கள், முற்றிலும் வணிக நோக்கத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

பட்டம் பெறுவதுடன் கல்வி நிறைவடையவில்லை என்றுக் குறிப்பிட்ட அவர், நமது கல்வி, மாணவரின் சிந்தனையைத் தூண்டுவதாகவும், நற்பண்புகளை வளா்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் துடிப்புடன் செயல்பட்டாக வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும், குடியுரிமை என்பது உரிமை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது நமது கடமை சார்ந்த விஷயம் என்றும் திரு. எஸ்.ஏ.பாப்டே கூறினார்.​
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00