சி.ஏ.ஏ.வில் குடியுரிமையை பறிக்கக்கூடிய வழிவகையை காட்ட முடியுமா? : ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Jan 19 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில், முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கக்கூடிய வழிவகையை காட்ட முடியுமா என்று, காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்திக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய, பா.ஜ.க., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, நாட்டு மக்களிடையே காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்களின் குடியுரிமைகள் பறிக்கப்படாது என்று தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில், முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கக்கூடிய வழிவகையை, திரு.ராகுல் காந்தியால் காட்ட முடியுமா என்று சவால் விடுத்த அவர், அப்படி ஏதாவது இருந்தால், அதுகுறித்து நேரடி விவாதம் நடத்த மத்திய அரசு ‌தயாராக இருப்பத‌ாகவும், இந்த சட்டம் குறித்து முதலில் ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்றும், உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா குற்றஞ்சாட்டினார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, இரண்டாவது முறையாக, திரு. ராகுல் காந்திக்கு சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00