குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்த மாநிலமும் மறுக்க முடியாது - நிறைவேற்றிய சட்டத்தை அமல்படுத்த மறுப்பது சட்ட விரோதமான செயல் : காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் அதிரடி கருத்து

Jan 19 2020 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று, எந்த மாநில அரசும் தெரிவிக்க முடியாது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கோழிக்கோட்டில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய, மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான, திரு. கபில் சிபல், குடியுரிமை திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும், எனவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்' என்று, எந்த மாநில அரசும் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை அமல்படுத்த மறுப்பது சட்ட விரோதமானச் செயல் என்று குறிப்பிட்ட அவர், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை, நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளருக்கும் இடையே நடைபெறும் போராட்டம் என்றும், இந்தப் போராட்டத்தை அரசியல் சார்பின்றி, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்னெடுத்துச் செல்வதாகவும், திரு. கபில் சிபல் கூறினார்.

முன்னதாக, கோழிக்கோட்டில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் பங்‍கேற்ற திரு. கபில் சிபல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபோது, ஏராளமான பொய்களை மத்திய அரசு கூறியது என்று குற்றஞ்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00