குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி S.A.Bobde தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை

Jan 22 2020 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி S.A.Bobde தலைமையிலான அமர்வு இந்த விசாரணையை நடத்துகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்‍க, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 18-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அரசமைப்புச் சட்டப்படி குடியுரிமை திருத்தச் சட்டம் செல்லுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. மேலும், இச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஜனவரி 2-ஆவது வாரத்துக்குள் பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.ஜெய்ராம் ரமேஷ், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் திரு.மனோஜ் ஜா, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. திரு.மஹுவா மொய்த்ரா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் திரு.அஸாதுதீன் ஒவைஸி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம், அசோம் கண பரிஷத் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளன. அம்மனுக்‍கள் மீது தலைமை நீதிபதி S.A.Bobde தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00