டெல்லி சட்டசபை தேர்தல் கூட்டணி - பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு : பா.ஜ.க.வுடன் இணைய மறுத்த கூட்டணி கட்சிகள்

Jan 22 2020 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சிகளான, சிரோன்மணி அகாலி தளம், ஜன்நாயக் ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை போட்டியிட மறுத்திருப்பது, பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நி‌லையில், சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்து, சிரோன்மணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜன்நாயக் ஜனதா ஆகிய கட்சிகள் ‍‍‍போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்தது. ஆனால், அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், சிரோன்மணி அகாலி தளம் போட்டியிடாது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தங்களுக்கு உடன்பாடில்லாததால் போட்டியிடப் போவதில்லை என்றும், அக்கட்சிக்கான டெல்லி தலைவர் திரு. மன்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.

இதையடுத்து, சின்னத்தை காரணம் காட்டி, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பா.ஜ.க.,வின் மற்றொரு கூட்டணி கட்சியான, ஜன்நாயக் ஜனதா அறிவித்துள்ளது. இதே போல், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், கட்சித் தலைவர் நிதிஷ் குமார் உரிய நிலைப்பாட்டை தெரிவித்தால் மட்டுமே, டெல்லி சட‌்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் திரு. பவன் வர்மா கூறினார். இவ்வாறு கூட்டணிக் கட்சிகள் தேர்தலை சந்திக்க மறுப்பது, பா.ஜ.க.,வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00