டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்‍கலுக்‍கு 6 மணிநேரம் காத்திருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் - பா.ஜ.க.வின் பின்னணியில் நடந்த சதி என குற்றச்சாட்டு

Jan 22 2020 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவாலின் வேட்பு மனு தாக்கல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல், நேற்றுடன் நிறைவு பெற்றது. புது டெல்லி தொகுதியில் போட்டியிடும், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், இறுதி நாளான நேற்று தனது மனுவை தாக்‍கல் செய்தார். திரு. கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்ய சென்றபோது 35 வேட்பாளர்கள் காத்திருந்தனர். அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இல்லாததால், மனு தாக்‍கல் பலமணி நேரம் தாமதமானது. இதனால் திரு. கெஜ்ரிவால் 6 மணி நேரம் காத்திருந்து மனுத்தாக்‍கல் செய்தார். வேண்டுமென்றே தமது மனுத்தாக்கலை, பா.ஜ.க. தாமதப்படுத்தியதாக, கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் வேட்பு மனு தாக்கல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெறுவதற்கு கடைப்பிடிக்கப்படும் வழக்‍கமான நடைமுறையே, கெஜ்ரிவாலிடமும் பின்பற்றப்பட்டதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00