கேரளா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து, ராஜஸ்தான் சட்டமன்றத்திலும், மத்திய பாரதிய ஜனதா அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : துணை முதலமைச்சர் Sachin Pilot அறிவிப்பு

Jan 24 2020 9:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தான் மாநில சட்டமன்றக்‍ கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய பாரதிய ஜனதா அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, இந்தக்‍ கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் திரு. Sachin Pilot தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்‍கும் புறம்பானது என்றும், முஸ்லிம் மக்‍கள் நலனுக்‍கு ஊறுவிளைவிக்‍கும் சட்டம் என்றும் குற்றம்சாட்டி, நாட்டின் பல பகுதிகளிலும், அரசியல் கட்சியினர், சமூக நலன் மற்றும் தன்னார்வ அமைப்பினர், மாணவ-மாணவியர், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்‍கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

குடியுரிமைச் சட்டத்தைக்‍ கண்டித்தும், மத்திய அரசு, அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களில் ஏற்கெனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேற்குவங்க சட்டமன்றத்தில் வரும் 27-ம் தேதி, குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று மேலும் சில மாநில சட்டமன்றங்களிலும் தீர்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வரும் 28-ம் தேதி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி பங்கேற்று, மாணவ-மாணவியர், இளைஞர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஜெய்ப்பூரில் நேற்று ஆய்வு செய்த, ராஜஸ்தான் துணை முதலமைச்சர் திரு. Sachin Pilot, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்று தொடங்க இருக்‍கும் சட்டமன்றக்‍ கூட்டத் தொடரில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நியாயமான காரணங்களுக்‍காக போராட்டங்கள் நடத்துவோரை, தேசவிரோதிகள் என்று மத்திய பாரதிய ஜனதா அரசு, முத்திரை குத்த முயற்சிப்பது, வன்மையாகக்‍ கண்டிக்‍கத்தக்‍கது என்றும் திரு. Sachin Pilot தெரிவித்தார்.

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில், நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் கோடிக்‍ கணக்‍கானோர் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக மிகுந்த இன்னலுக்‍கு ஆளாகியிருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் திரு. Sachin Pilot குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00