நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மனுக்கள் அனைத்தும் நிராகரிப்பு - தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்துவதற்காக புதிய மனு தாக்கல்

Jan 24 2020 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறு சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட பிறகும், தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியில், நிர்பயா குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதையொட்டி, தங்களது கடைசியை ஆசையை தெரிவிக்கும்படி, குற்றவாளிகளிடம் திகார் சிறைத் துறை அதிகாரிகள் எழுத்து மூலம் கேட்டனர். ஆனால் இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல், அவர்கள் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில், தூக்குத் தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியில், குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கருணை மனு, சீராய்வு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் வழக்கறிஞர் சார்பில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வினய் மற்றும் அக்சய் குமாரின் சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை என்றும், தகவல்கள் வெளியிடப்படும் வரை, தூக்குத் தண்ட‌‌னையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது, நாளை விசாரணை நடைபெற உள்ளது. இந்த மனுவும் நிராகரிக்கப்படும் என்று தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00