குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பது எப்படி? : ஒரு வாரத்திற்குள் வழிமுறைகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Jan 24 2020 8:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தலில் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்யும்படி, தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிட தடை விதிக்கக்கோரி, பா.ஜ.க.,வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு. நாரிமன், திரு. ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கிரிமினல் பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் வாய்ப்பு வழங்காமல் இருந்தால் போதுமானது என்று தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிரிமினல் குற்றப்பின்னணி பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தகவல் வெளியிட வேண்டும் என்ற 2018-ம் ஆண்டு அறிவிப்பு எந்த பலனையும் அளிக்கவில்லை என்றும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், தேர்தலில் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00