திஹார் சிறை நிர்வாகம் மீது புகார் தெரிவித்து, நிர்பயா குற்றவாளிகள் தாக்‍கல் செய்த மனுக்‍கள் : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி

Jan 25 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
திஹார் சிறை நிர்வாகம் மீது புகார் தெரிவித்து, நிர்பயா குற்றவாளிகள் தாக்‍கல் செய்த மனுக்‍களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதையொட்டி, தங்களது கடைசி ஆசையை தெரிவிக்கும்படி, குற்றவாளிகளிடம் திஹார் சிறை நிர்வாகம் கேட்டதற்கு, அவர்கள் பதில் ஏதும் தெரிவிக்‍கவில்லை.

ஆனால், தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியில் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். கருணை மனு, சீராய்வு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் வழக்கறிஞர் சார்பில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வினய் குமார், அக்‌ஷய் குமார் சிங், பவன் சிங் ஆகியோருக்கான கருணை மனுவை தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை, திஹார் சிறை நிர்வாகம் வழங்கவில்லை என தெரிவிக்‍கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்‍கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தாமதிக்க குற்றவாளிகள் முயற்சிப்பதாகவும், அவர்கள் கேட்ட ஆவணங்கள், ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த வழக்‍கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00