கொரோனா வைரஸ் பரவும் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை - வரும் 31-ம் தேதி சிறப்பு ஏர் இந்தியா விமானத்தை இயக்க மத்திய அரசு முடிவு

Jan 29 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க, வரும் 31-ம் தேதி சிறப்பு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது, பல்வேறு நாடுகளுக்‍கு பரவி உள்ளது. இதனால், வுஹான் நகருக்கு, மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வுஹான் நகரில் ஏராளமான இந்தியர்கள் சிக்‍கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எனக்‍ கூறப்படுகிறது. இவர்களை, இந்தியா அழைத்துவர, மத்திய அரசு நடவடிக்‍கை எடுத்து வருகிறது. வுஹான் நகரிலிருந்து மக்‍கள் வெளியேற தடை விதிக்‍கப்பட்டுள்ளதால், சீன அரசின் அனுமதி கிடைத்தவுடன், ஏர் இந்தியா விமானம், டெல்லியிலிருந்து சீனா புறப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர போயிங் 747 விமானத்தை இயக்க ஏர் இந்தியாவிற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. வரும் 31-ம் தேதி இந்த விமானம், இயக்‍கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00