ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர், பவன் வர்மாவை நீக்கி நிதிஷ்குமார் உத்தரவு

Jan 29 2020 7:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோரை நீக்குவதாக, அக்கட்சித் தலைவரும், பீகார் முதலமைச்சருமான திரு. நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் முதலமைச்சருமான திரு. நிதிஷ் குமாருக்கும், அக்கட்சித் துணைத் தலைவரும், தேர்தல் திட்ட நிபுணருமான திரு. பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த திரு. நிதிஷ் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பரிந்துரையின்படியே பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்‌த்ததாகவும், வேண்டுமானால் கட்சியிலிருந்து அவர் விலகிக் கொள்ளட்டும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், திரு. பிரசாந்த் கிஷோரை கட்சியிலிருந்து நீக்கி, ஐக்கிய ஜனதா தள கட்சித் த‌லைவர் திரு. நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதே போல், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், திரு. நிதிஷ் குமாருக்கு எதிராக கருத்து தெரிவித்த திரு. பவன் வர்மாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்த திரு. பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்ள வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00