காவிரி குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும்

Feb 14 2020 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆலோசனைக்‍‍ கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவர் இதுவரை நியமிக்‍கப்படவில்லை. இதனால் பல மாதங்களாக ஆணையத்தின் கூட்டம் நடைபெறவில்லை. ஆயினும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்‍ கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான கூட்டம், நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், தமிழக பொதுப்பணித்துறை, காவிரி தொழில்நுட்பக்‍குழு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். தமிழகத்திற்கு ஃபிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை விரைவில் நியமித்து, ஆணையத்தின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00