பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது நடவடிக்‍கைக்கு எதிராக ஒமர் அப்துல்லா சகோதரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்‍கு : ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Feb 14 2020 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திரு. ஒமர் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள், திரு. ஃபரூக் அப்துல்லா, திரு. ஒமர் அப்துல்லா, திருமதி. மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில், ஃபரூக் அப்துல்லா, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்‍கப்பட்டனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, ஒரு ஆண்டுக்கு எந்த விசாரணையும் இன்றி, சிறையிலோ, வீட்டுக்காவலிலோ வைத்திருக்க முடியும்.

ஒமர் அப்துல்லா மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்‍கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது சகோதரி சாரா அப்துல்லா, உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த மனு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, மனு குறித்து பதிலளிக்‍க ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. வழக்‍கு விசாரணை வரும் 2-ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00