நிர்பயா வழக்‍கில் வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்‍கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்‍கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Feb 14 2020 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிர்பயா பாலியல் வழக்‍கின் குற்றவாளிகளை கடந்த 22-ம் தேதி தூக்‍கிலிட உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டு, பின்னர் கடந்த ஒன்றாம் தேதிக்‍கு தண்டனை தேதி மாற்றப்பட்டது. ஆனால், கருணை மனு, குறைதீர்ப்பு மனு உள்ளிட்ட சட்ட வாய்ப்புகளால், கடந்த ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனையை பாட்டியாலா நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனிடையே, குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்‍கல் செய்யப்பட்டது. கருணை மனுவை, குடியரசுத் தலைவர் முறைப்படி ஆராயவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வினய் சர்மா, மனநலம் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும் தெவிரிக்‍கப்பட்டிருந்தது. மனு மீது நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. கருணை மனு விவகாரத்தில், வினய் சர்மாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என தெரிவித்த உச்சநீதிமன்றம், அவர் நல்ல மனநிலையுடனேயே இருப்பதாக மருத்துவர்கள் அறிக்‍கை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00