வருவாயை குறைத்து காட்டியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் - உத்தரவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்றும் விளக்‍கம்

Feb 14 2020 7:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
வருவாயை குறைத்து காட்டியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது உத்தரவு நிறைவேற்றப்படாததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தை பின்பற்றாத இந்த நாட்டில் வாழ்வதற்கு பதில், நாட்டை விட்டு சென்று விடலாம் என்றும் காட்டமாக தெரிவித்தனர்.

தொலைத் தொடர்பு கொள்கையின்படி, வருவாயின் ஒரு பகுதியை, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், முன்னணி நிறுவனங்களான, பார்தி ஏர்டெல், வோடபோன் - ஐடியா ஆகியன வருவாயை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 92 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் செலுத்த, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, 2019 அக்டோபர் மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அபராதம் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதற்கி‌டையே, நிலுவைத் தொகை செலுத்தும் வரை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று, மத்திய தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரி ஒருவர் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களது உத்தரவு நிறைவேற்றப்படாததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகள் தங்களை நீதிபதியாக கருதினால், நீதிமன்றம் எதற்கு? என்று கேள்வி எழுப்பினர். மேலும், சட்டத்தை பின்பற்றாத இந்த நாட்டில் வாழ்வதற்கு பதில், வேறு நாட்டிற்கு சென்று விடலாம் என்றும், காட்டமாக தெரிவித்தனர்.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கும் அதிகாரி யார்?... நீதிமன்றத்தில் எப்படி வேலை செய்வது...? நிலுவைத்தொகை செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, உத்தரவு பிறப்பித்த அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, சம்பந்தப்பட்ட மத்திய தொலை‌த் தொ‌டர்பு அதிகாரியை சிறைக்கு அனுப்ப நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை, வரும் மார்ச் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00