NCERT பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்‍கழகத்திற்கு, மாநிலத் தகவல் ஆணையம் உத்தரவு

Feb 16 2020 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான N.C.E.R.T. வெளியிட்டுள்ள, 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்‍கழகத்திற்கு, தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணிகளுக்‍கான போட்டித் தேர்வுகளும், மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்‍கான NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளும், ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான NCERT பாடத்திட்ட அடிப்படையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளுக்‍கு NCERT வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல், பொருளியல், கணிதம் ஆகிய பாடப்புத்தகங்கள் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கிடைக்‍கின்றன. அவற்றை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்‍கழகம் மொழி பெயர்த்து வெளியிட்டால், தமிழில் போட்டித் தேர்வுகளை எழுதுவோர் பயனடைவார்கள் என சென்னை ஆவடியைச் சேர்ந்த ஆர். சந்தர் என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கு கோரிக்‍கை மனு அனுப்பியிருந்தார். இதனையடுத்து, ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான வேதியியல், இயற்பியல், பொருளியில் உள்ளிட்ட ஆறு பாடங்களுக்‍கான NCERT புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்‍கும்படி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்‍கழகத்திற்கு மாநிலத் தகவல் ஆணையர் திரு. எஸ். முத்துராஜ் உத்தரவிட்டுள்ளார். ​மொழிபெயர்க்‍கப்பட்ட பாடப் புத்தகங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நான்காவது பிரிவின்படி தமிழ்ப் பல்கலைக்‍கழகத்தின் இணைய தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00