வாக்குப்பதிவு இயந்திரத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் தேர்தல் ஆணையம் - வெளியூரில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த முயற்சி

Feb 17 2020 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தலின்போது, வெளியூர்களில் இருப்பவர்கள் அங்கிருந்தபடியே வாக்களிக்க வசதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் புதிய தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நேரங்களில், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள், வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்லவேண்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலில் இருந்து, சொந்த ஊருக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் போன்ற பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்க, பணியாற்றும் பகுதியிலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

எனவே வெளியூரில் பணியாற்றுபவர்கள், தங்கள் இருப்பிடத்திலேயே வாக்களிக்க வசதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் புதிய தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 'பிளாக் செயின்' எனப்படும் இந்த தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து தேர்தல் ஆணையம் உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட இடங்களில் பிரத்யேக வாக்குப்பதிவு மையங்களை அமைக்கும். வெளியூரில் ஓட்டு இருப்பவர்கள் இந்த மையத்தில் முன்கூட்டியே விண்ணப்பித்து, இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்கலாம். இந்த தொழில்நுட்பம் முழுமையாக நிறைவடைந்த பின்பு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து, தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்புதான், அமலுக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00