பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங்குக்கு ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடி - கடந்த 2013-ம் ஆண்டு பதவியிலிருந்து விலக மன்மோகன் சிங் திட்டமிட்டதாக புதிய தகவல்

Feb 17 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தியின் செயலால், கடந்த 2013-ம் ஆண்டு, பிரதமர் பதவியில் இருந்து விலக திரு. மன்மோகன் சிங் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யலாம் என்று, கடந்த 2013-ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு, அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி தண்டனையை எதிர்த்து எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் மேல்முறையீடு செய்து தண்டனைக்‍கு தடை பெற்றால், அவர்கள், ஊதியம் பெறாமல், வாக்களிக்கும் உரிமை இல்லாமல், பதவியில் நீடிக்கலாம் என அவசர சட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரு. ராகுல் காந்தி, அவசர சட்டத்தின் நகலை கிழித்தெறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தின்போது, அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த திரு. மன்மோகன்சிங், தமது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக, அப்போது, மத்திய திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த திரு.அலுவாலியா தெரிவித்துள்ளார். பதவியை ராஜினாமா செய்வது குறித்து திரு. மன்மோகன் சிங், தம்மிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவசியமில்லை என தாம் கூறியதாகவும், தாம் எழுதியுள்ள Backstage என்னும் புத்தகத்தில் திரு. அலுவாலியா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00