குஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த விவகாரம் : தேசிய மகளிர் ஆணையம் தீவிர விசாரணை

Feb 17 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில், கல்லூரி வளாகத்தில் உள்ள சமையல் அறைக்கு சென்ற 60-க்கும் மேற்பட்ட மாணவிகளை, பெண்களுக்கான மாத நிகழ்வை காரணம் காட்டி, கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

குஜராத்தில், ஸ்ரீ சஜ்ஜானந்த் பெண்கள் கல்லூரியில், பெண்களுக்கான மாத நிகழ்வின்போது, மாணவிகள் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது, பழகக்கூடாது, சமையல் அறைக்‍குள் நுழையக்‍கூடாது என்ற கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்துள்ளது. இந்த விதியை சில மாணவிகள் மீறியதாக கூறி, கல்லூரி முதல்வர் தலைமையில், விடுதியில் இருந்த 68 மாணவிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட 68 மாணவிகளில், 44 மாணவிகளிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கல்லூரியில் சேரும்போதே, மாத நிகழ்வின்போது, சமையல் அறைக்கு வரமாட்டோம், படுக்கையில் படுக்காமல் தரையில் படுப்போம் என்பது போன்ற நிபந்தனைகளில் விடுதி நிர்வாகம் தங்களிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கியதாக மாணவிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விடுதியின் முதல்வரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00