நாட்டின் எல்லை பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள புதிதாக ராணுவ நிலைகள் - முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தகவல்

Feb 18 2020 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லையில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிதாக ராணுவ நிலைகள் ஏற்படுத்தப்படும் என முப்படை தலைமை தளபதி திரு.பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜம்மு - காஷ்மீர் பிராந்தியத்தின் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்தும் வகையில், அந்த பிராந்தியத்துக்கென, ராணுவத்தில் தனி படைப் பிரிவு அமைக்கப்படும் என தெரிவித்தார். விமானப் படைக்கான தனிப் பிரிவு, அடுத்தாண்டு துவக்கத்தில் செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம், நீண்ட துார ஏவுகணை மற்றும் விமானப் படையின் சொத்துக்கள் அனைத்தும், இந்த படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் வரும் என அவர் குறிப்பிட்டார்.

இந்திய கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு படைப் பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, தீபகற்ப படைப் பிரிவு உருவாக்கப்படும் என தெரிவித்த திரு. பிபின் ராவத், போக்குவரத்து மற்றும் பயிற்சி போன்றவற்றுக்கு, தனிப் பிரிவுகள் உருவாக்கப்படும் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00