கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - டெல்லி முதலமைச்சருக்‍கு அம்மாநில நீதிமன்றம் அறிவுறுத்தல்

Feb 26 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் கலவரம் பாதிக்‍கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேரில் ஆய்வு செய்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வந்தது. இதுபோன்ற தருணத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எச்சரிக்‍கையுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கலவரத்தில் காவல்துறை அதிகாரி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது எனத் தெரிவித்த நீதிமன்றம், டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, டெல்லி சம்பவம் தொடர்பாக வெறுக்‍கத்தக்‍க பேச்சுகளை பேசிய புகாரில் கபில் மிஸ்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் 3 பேர் மீது வழக்‍குப் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு, அரசு தரப்பு தலைமை வழக்‍கறிஞர் திரு. துஷார் மேத்தா-விடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00