அத்தியாவசியப் பொருட்களுக்‍கு தட்டுப்பாடு வராது என மத்திய அரசு தகவல் - பெட்ரோல் பங்க்குகள், வங்கிகள் உள்ளிட்டவை செயல்படும் என அறிவிப்பு

Mar 25 2020 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் அடுத்த மா‌தம் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், எவை இயங்கும், எவை இயங்காது என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், இந்த ஊரடங்கு சமயத்தில், எவை இயங்கும், எவை இயங்காது என்பது குறித்த அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், ரேஷன், காய், கனி, மளிகை, இறைச்சிகள், மீன் கடைகள் செயல்படும் - அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்படத் தடையில்லை - இது தொடர்பான போக்குவரத்துக்கும் தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படும் - உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி - பெட்ரோல் பங்க்குகள், கேஸ் ஏஜென்சிகள் செயல்பட அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்துக்குத் தடையில்லை - ஊடகங்கள் செயல்படத் தடையில்லை - செல்போன், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் உள்ளிட்ட சேவைகள் செயல்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் 15-ம் ‍தேதிக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - விளையாட்டு, கலாசாரம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தத் தடை - பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை செயல்படத் தடை - இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்படும் - பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி - விமானம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்குத் தடை - தனிமைப்படுத்துதலை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00