கொரோனா பாதிப்பு எதிரொலியாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.களில் சேவைக் கட்டணம் கிடையாது - மத்திய அரசு அறிவிப்பு

Mar 25 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பாதிப்பு எதிரொலியாக, அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களிலும் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், வருமானவரி, ஜி.எஸ்.டி. தாக்‍கல் உள்ளிட்டவைகளில் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். அதன்படி, வருமான வரி கணக்‍கு தாக்‍கல் செய்வதற்கு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்‍கப்பட்டுள்ளதாகவும், ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களிலும் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்றும், அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை கிடையாது என்றும், ஜி.எஸ்.டி, சுங்கவரி உள்ளிட்ட கணக்‍குகளை தாக்‍கல் செய்ய தொழில் துறையினருக்‍கு கூடுதல் அவகாசம் அளிக்‍கப்படுவதாகவும், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00