ரஷிய அதிபர் புதின் - பிரதமர் மோதி தொலைபேசியில் பேச்சு : கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசனை

Mar 26 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில், வைரஸ் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் திரு. நரேந்திர மோதி நேற்று தொலைபேசியில் உரையாடினர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ரஷியாவிலும் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 658 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் திரு. நரேந்திர மோதி நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், ரஷியாவில் உள்ள இந்திய மாணவர்களின் நலனை பாதுக்காக்க வேண்டும் என பிரதமர் திரு. மோதி வேண்டுகொள் விடுத்துள்ளார். அதற்கு இந்திய மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் ரஷிய அதிபர் புதின் உறுதி அளித்தார். அதேபோல் இந்தியாவில் உள்ள ரஷிய நாட்டினரின் நலன் காக்கவும், தேவைப்பட்டால் சொந்த நாட்டிற்கு அனுப்பவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என புதினுக்கு பிரதமர் உறுதி அளித்தார்.

இந்த உரையாடலின் போது கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளின் ஒத்துழைப்பின் அவசியம், ஜி-20 கூட்டமைப்பின் பங்கு, கொரோனாவால் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00