80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி, கோதுமை, பருப்பு வழங்கப்படும் - உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Mar 26 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் ஒன்று புள்ளி 70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்‍கு உதவிகள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்தார். கொரோனாவுக்கு எதிராக போரிடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவிற்கு மருத்துவ காப்பீடு எடுக்கப்படும் - விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் வழங்கப்படும் - 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம்தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என கூறினார். வீடுகள்தோறும் கூடுதலாக 3 மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் - 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன், அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ கோதுமை வழங்கப்படும் - ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் - 100 நாள் வேலை திட்டத்தின் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - முறைசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் 8 கோடியே 69 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஊதியம் 182 ரூபாயிலிருந்து 202 ஆக உயர்த்தப்படும் - உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00