ஜம்மு காஷ்மீர், குஜராத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் இன்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு - நாடு முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

Mar 26 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர், குஜராத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்திருப்பதால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 649-ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில் பரவிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவையே அச்சுறுத்தி வருகிறது. டெல்லி, கேரளா உட்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 85 வயது மூதாட்டி உயிரிழந்தார். கடந்த 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குஜராத் மாநிலம் Bhavnagar நகரில் கடந்த 26-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டு அனுமதிக்‍கப்பட்ட 70 வயதான முதியவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில், காஷ்மீர் ஸ்ரீநகரில் Hyderpora பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவர், கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேபோல், ராஜேஸ்தானில் Bhilwara நகரில் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். 40 பேர் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் இந்தியாவில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 126-ஆக உயர்ந்துள்ளது. ‍கோவா மாநிலத்தில், 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில், 118 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில், 41 நபர்களுக்கும், குஜராத் மாநிலத்தில், 37 பேருக்கும், தமிழகத்தில், 26 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00