ஊரடங்கை மீறுவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் - மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு உத்தரவு

Mar 29 2020 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், டெல்லியில் வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களுக்கு நடந்தே சென்றனர். இவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக உத்தரபிரதேச அரசு ஆயிரம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகலே தீர்வு என அறிவுறுத்தப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக திரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக, நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, ஊதியம் உள்ளிட்டவை கிடைக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியேறுபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும், வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வெளியேற்ற முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00