நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு சமூகப் பரவல் நிலை இதுவரை எட்டவில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Mar 31 2020 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு, சமூகப் பரவல் நிலையை இதுவரை எட்டவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில், செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. Luv Aggarwal, மத்திய அரசு மேற்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து எடுத்துக்‍ கூறினார். வைரசால் பாதிக்‍கப்பட்டோர் மற்றும் அவர்களிடமிருந்து, அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்‍கு வைரஸ் பரவுவது ஆகிய நிலைதான் தற்போது நிலவுவதாகவும், மென்மேலும் அதிகமானோருக்‍குப் பரவுகின்ற, Community Transmission எனப்படும் சமூகத் தொற்று நிலைமை இதுவரை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்‍கள் அனைவரும் Social Distancing எனப்படும் சமூக விலகல் முறையை, கண்டிப்புடன் கடைபிடித்து, தங்கள் வீட்டுக்‍குள்ளேயே இருக்‍க வேண்டும் என்றும், இதன் மூலம் அதிகமானோருக்‍கு வைரஸ் பரவுவதைத் தடுக்‍க முடியும் என்றும் திரு. Luv Aggarwal தெரிவித்தார். இதில் ஏதேனும் ஒருவர் அலட்சியமாக இருந்தால்கூட, வைரஸ் பாதிப்பு அதிகரித்து, பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்தார். இக்‍கட்டமான இந்தத் தருணத்தில் மக்‍களிடையே வீண் வதந்தியைப் பரப்புவது, பதற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய செயல்களில் யாரும் ஈடுபடக்‍ கூடாது என்றும், நோய்த் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்‍களிடையே ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்‍ கொண்டார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்‍குழு - I.C.M.R. அமைப்பைச் சேர்ந்த R.Gangakhedkar, நாட்டில் இதுவரை 38 ஆயிரத்து 442 மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், நாட்டின் மருத்துவப் பரிசோதனை திறன் கட்டமைப்பில் இது, 30 சதவீதத்திற்கும் குறைவானதுதான் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00