நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்‍கு 4 ஆயிரத்து 858 பேர் பாதிப்பு - 133 பேர் உயிரிழப்பு

Apr 7 2020 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 858-ஆக அதிகரித்துள்ளது. திரிபுராவில் முதன்முறையாக ஒருவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்‍கு 52 பேர் பலியான நிலையில், பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 891-ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 621 பேரும், டெல்லியில் 525 பேரும், தெலங்கானாவில் 364 பேரும், கேரளாவில் 327 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 305 பேர், ஆந்திராவில் 304 பேர், ராஜஸ்தானில் 325 பேர், மத்தியப்பிரதேசத்தில் 268 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். குஜராத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 133 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 858-ஆக உயர்ந்துள்ளது. 383 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே, திரிபுரா மாநிலத்தில் முதன்முறையாக ஒருவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதய்பூரில் ஒருவர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு. பிப்லாப் குமார் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் தலா ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00