எம்.பி.க்களின் 30 சதவீத ஊதிய பிடித்தம் என்ற மத்திய அமைச்சரவை முடிவுக்கு சோனியா காந்தி ஆதரவு

Apr 7 2020 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவுக்கு எதிரான போருக்கு அதிக நிதி தேவைப்படுவதால் சிக்கன நடவடிக்கைகள் அவசியம் என பிரதமருக்கு, திருமதி சோனியா காந்தி யோசனை தெரிவித்துள்ளார். எம்.பி.க்களின் 30 சதவீத ஊதிய பிடித்தம் என்ற மத்திய அமைச்சரவை முடிவுக்கும், அவர் ஆதரவு அளித்து உள்ளார்.

பிரதமர் திரு. மோதிக்‍கு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, 5 முக்கிய பரிந்துரைகளையும் அவர் வழங்கி உள்ளார்.

எம்.பி.க்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சோனியா, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் தேவையான நிதிகளை திரட்டுவதற்கு, சிக்கன நடவடிக்கைகள் தேவை என்று கூறி உள்ளார்.

குறிப்பாக 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இந்த தொகை புதிய மருத்துவமனை உள்கட்டமைப்புகளை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், விளம்பரங்களுக்காக ஆண்டுக்கு மத்திய அரசால் செலவிடப்படும் ஆயிரத்து 250 கோடி ரூபாயை சேமிக்‍கும் வகையில், விளம்பரங்களுக்கு தடை விதிக்‍க வேண்டும் என திருமதி சோனியா காந்தி கூறி உள்ளார்.

பிரதமர் கேர்ஸ் நிதியத்தில் உள்ள அனைத்து பணத்தையும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றி, செயல்திறன், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00