எம்.பி.க்‍கள் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தியதற்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு - மத்திய அரசின் நடவடிக்கையால் உள்ளூர் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு

Apr 8 2020 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
எம்.பி.க்‍கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியதற்கு, கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் உள்ளூர் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு.பினராயி விஜயன், கேரளாவில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்தார். மாநிலத்தில் 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 263 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். கேரளாவில் உணவுப் பொருள் இருப்பு போதுமான அளவிற்கு உள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையை கருதி, கூடுதலாக உணவுப்பொருள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தியது நியாயமல்ல என தெரிவித்த திரு.பினராயி விஜயன், இதை ஏற்க முடியாது அது மக்களுக்குரிய பணமாகும் - மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் உள்ளூர் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். எம்.பிக்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00