இந்தியாவில் ஒரே நாளில் 573 ‍பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,350-ஐ கடந்தது - 160 பேர் பலி

Apr 8 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில், ‍நேற்று ஒரே நாளில், 573 ‍பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் மிக வேகமாகப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 573 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடு‌த்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில், நேற்று ‍ஒரே நாளில், 150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை, 64 பேர் பலியாகி உள்ளனர்.

தலைநகர் டெல்லியில், 576 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 9 பேர் மரணமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில், ‍‍நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்த‌ான் மாநிலத்தில், 343 பேரும், கேரள மாநிலத்தில், 336 பேரும், உத்தர பிரதேச மாநிலத்தில், 332 பேரும், ஆந்திர பிரதேச மாநிலத்தில், 314 ​பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை ​பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 160 பேர் உயிரிழந்‌துள்ள நிலையில், 464 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00