கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க மக்‍கள் என்ன செய்ய வேண்டும்? - வழிமுறைகள் பற்றிய விவரத்தை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்

Apr 10 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்‍கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பொது சேவைகளில் ஈடுபடுவோரை பாராட்டி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு அல்லது மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ தகவலை மட்டுமே பிறருக்கு பகிரவேண்டும் - சமூக ஊடகங்களில், ஒரு செய்தியை பகிர்வதற்கு முன், அந்த தகவல் உண்மையானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா வைரசில் இருந்து மீண்டு வந்தவர்களின் நேர்மறையான செய்திகளை பகிரவேண்டும். அதேநேரம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடக்கூடாது - மருத்துவ, சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து எந்த விமர்சன பதிவுகளையும் பகிரக்கூடாது.கொரோனா வைரஸ் பரவலுக்கு, குறிப்பிட்ட சமூகத்தினர்தான் காரணம் என வதந்தி பரப்பக்‍கூடாது - சிகிச்சைப் பெற்று வருவோரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் என சொல்லாமல், கொரோனாவில் இருந்து மீண்டு வருவோர் என்று அழைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00