நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? - முதலமைச்சர்கள் கூட்டத்தில் நாளை முடிவை அறிவிக்கிறார் பிரதமர் மோதி

Apr 10 2020 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மோதி நாட்டு மக்களிடையே நாளை மீண்டும் உரையாற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, 21 நாட்கள் தேசிய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென கடந்த 24-ம் தேதி அறிவித்தார். இந்த ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பல்வேறு அரசியல் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை காணொளி காட்சி மூலம் ஆலோசிக்க உள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என தெரிகிறது. இருப்பினும், கடந்த முறை அறிவிக்கப்பட்டதுபோல் அல்லாமல், இந்த முறை கூடுதல் திட்டங்கள் மற்றும் வழிமுறைகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00