கொரோனா பரவலைத் தடுக்‍க நடவடிக்கைகள் தீவிரம் - நாடு முழுவதும் ஆயிரத்து 200 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைப்பு

Apr 10 2020 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவலைத் தடுக்‍க நாடு முழுவதும் ஆயிரத்து 200 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்‍கப்பட்டுள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்‍கப்பட்டுள்ள பகுதிகளில், தொற்று மேலும் பரவுவதை தடுப்பதற்காக கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்‍கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்‍கப்பட்டுள்ளது. உள்ளே இருப்பவர்களுக்‍கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், உள்ளூர் நிர்வாகத்தினர் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். இவ்வாறு, நாடு முழுவதும் ஆயிரத்து 200 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்‍கப்பட்டுள்ளன. அதிக அளவாக மஹாராஷ்ட்ராவில் 401, தமிழகத்தில் 220 பகுதிகள், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்‍கப்பட்டுள்ளன. மத்தியப்பிரதேசத்தில் 180, உத்தரப்பிரதேசத்தில் 105, தெலங்கானாவில் 125, ஆந்திராவில் 121, ராஜஸ்தானில் 38 மற்றும் டெல்லியில் 23 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00