நாளை முதல் பொது சேவை மையங்களில் ரெயில் டிக்கெட் பதிவுக்‍கு அனுமதி - அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

May 21 2020 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
அடுத்த மாதம் 1-ம் தேதிமுதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இன்று முன்பதிவு நேரத்தில் 2 மணிநேரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் டிக்‍கெட் பதிவு செய்துள்ளனர். மேலும் கூடுதல் ரயில் சேவைகளை இயக்‍க உள்ளதாகவும், நாளை முதல், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பொதுசேவை மையங்களில் ஆன்லைன் பதிவுக்‍கு அனுமதி வழங்கப்படுவதாகவும் ரயில்வேதுறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா விதிமுறைகள் தளர்வைத் தொடர்ந்து ஜுன் 1-ம் தேதிமுதல் ரயில்கள் இயக்‍கப்படவுள்ளன. இதற்காக முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், 2 மணிநேரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவுக்‍கான டிக்‍கெட்டை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வரும் நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்‍கப்படவுள்ளதாகவும், ரயில் நிலையங்களில் கடைகளைத் திறக்‍க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வேதுறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்கள் ஓரிரு தினங்களில் செயல்பட அனுமதிக்‍கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், 279 Shramik ரயில்கள் இயக்‍கப்பட்டு, அவற்றின் மூலம் 5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்‍கு அனுப்பி வைக்‍க சில மாநிலஅரசுகள் ஒத்துழைக்‍கவில்லை என குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல், நாடு முழுவதும் 40 லட்சம் பேர் மேற்குவங்கம் செல்ல விரும்புவதாகவும், ஆனால், 27 சிறப்பு ரயில்கள் மட்டுமே அம்மாநிலத்திற்குச் செல்ல அனுமதிக்‍கப்பட்டதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00