புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பிரதமர் இன்று பயணம்: வான் மார்க்கமாக பாதிப்புகளை பார்வையிடுகிறார்

May 22 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
உம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இன்று செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோதி, புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிடவுள்ளார்.

வங்கக்கடலின் தென்பகுதியில் உருவான உம்பன் புயல், மேற்கு வங்கத்தின், டிகாவுக்கும் ஹாடியா தீவுக்கும் இடையே நேற்று முன்தினம் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 72 பேர் உயிரிழந்தனர். ஒடிசா மாநிலமும் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டுக்கு பின்னர், வங்கக்கடலில் உருவான புயல்களில் அதிதீவிரமானது "உம்பன்" என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,உம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இன்று செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோதி, புயல் சேதங்களை வான் வழியாக பார்வையிடவுள்ளார். இதன் பின்னர், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்த விவாதத்தில் அவர் பங்கேற்கிறார். இதற்கிடையே, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சக குழு விரைவில் அங்கு செல்லவுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் இயக்குநர் திரு. எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00