கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்வது தொடர்பான நெறிமுறைகள் : இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியீடு

May 22 2020 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பான பல்வேறு நெறிமுறைகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அவசர சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழந்தால், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபர், பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே இறந்துவிட்டால், அவரது உடலை, முடிவுகள் வெளியாகும் வரை வெளியேற்றக் கூடாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், உயிரிழந்தவரின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு மூட வேண்டும். பின்னர் இறந்தவரின் உடலை மாவட்ட நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதிச்சடங்கில் 5க்கும் மேற்பட்டோர் பங்கேற்கக் கூடாது. மேலும், உயிரிழந்தவரின் உடலில் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டே நிற்க வேண்டும். இறுதிச்சடங்கின்போது, உயிரிழந்தவரின் உடலைத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 6 முதல் 8 அடி ஆழம் வரை குழி தோண்டி உடலைப் புதைக்க வேண்டும். புதைக்கப்பட்ட இடத்தின் மேற்புறத்தில் சிமெண்ட் பூச்சு பூச வேண்டும் என, அந்த செய்திக்குறிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00