உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோதி - மேற்குவங்கத்தின் பல்வேறு இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு
May 22 2020 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உம்பன் புயலால் மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை, பிரதமர் திரு. நரேந்திர மோதி, வான்வழியாக இன்று பார்வையிட்டார்.
உம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, பிரதமர் திரு. நரேந்திர மோதி, இன்று மேற்கு வங்கம் சென்றார். கொல்கத்தா விமான நிலையத்தில், பிரதமரை, அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் தனி விமானம் மூலம், பிரதமர் திரு. மோதி புயல் சேதங்களை வான் வழியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வங்கக்கடலின் தென்பகுதியில் உருவான உம்பன் புயல், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் 80 பேர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.