மேற்குவங்கத்தை தொடர்ந்து ஒடிசாவிலும் பிரதமர் மோதி ஆய்வு - புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு முதலமைச்சருடன் ஆலோசனை

May 22 2020 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
உம்பன் புயலால் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ள மேற்குவங்க மாநிலத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் திரு. நரேந்திர மோதி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை தொடர்ந்து, ஒடிசா சென்றுள்ள அவர், அங்கும் புயல் பாதித்த பகுதிகளை வான் வழியில் பார்வையிடுகிறார்.

உம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, பிரதமர் திரு. நரேந்திர மோதி, இன்று மேற்கு வங்கம் சென்றார். அவரை, அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம், பிரதமர் திரு. மோதி புயல் சேதங்களை வான் வழியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர், உம்பன் சூறாவளியால் பாதிக்‍கப்பட்டுள்ள மேற்குவங்க மக்‍களுக்‍கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும், மறு சீரமைப்புக்‍கான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் தெரிவித்தார். புயல் பாதிப்புகள் குறித்து மாநில அரசிடம், விரிவான அறிக்‍கையை கேட்டுள்ளதாகவும், நிவாரண நிதியாக அம்மாநிலத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் பிரதமர் திரு. மோதி கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஒடிசா சென்ற பிரதமர் மோதிக்கு, புவனேஸ்வர் விமான நிலையத்தில் முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக், ஆளுநர் கணேஷி லால் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பிரதமர் மோதி, ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00