தொழிலாளர்கள் வாரத்தில் 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும் - கர்நாடக அரசு உத்தரவு

May 23 2020 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
தொழிலாளர்கள் வாரத்தில் 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் 50 நாட்களுக்கும் மேல் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த நிறுவனங்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்தி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது வாரத்தில் ஒரு தொழிலாளி 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும். கூடுதல் நேரம் பணியாற்றினால் வழங்கப்படும் சம்பளம் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் சிவலிங்கையா பிறப்பத்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00